2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதகுப் பாலம் நடுவில் சேதம்

George   / 2015 மே 28 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் காட்டம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள மதகுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை காரணமாக மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டியில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

அக்கராயன் மணியங்குளத்தின் பின்புறமாகவுள்ள பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. இந்த மணல் அகழ்வில் ஈடுபடுகின்ற உழவு இயந்திரங்கள், மற்றும் டிப்பர் ரக வாகனங்கள் இந்த வீதியின் ஊடாக இரவில் பயணிக்கின்றன.

இதனால், அதிக பாரத்தைத் தாங்க முடியாத இந்த மதகுப் பாலத்தில் ஓட்டை வீழ்ந்துள்ளது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த மதகு பாலமே இவ்வாறு சேதமடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .