2025 ஜூலை 05, சனிக்கிழமை

மாந்தை கிழக்கு கிராம அலுவலகர் பிரிவுகளில் அபிவிருத்தி பணிகள்

Princiya Dixci   / 2015 மே 28 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சகல கிராம அலுவலகர் பிரிவிலும் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள், புதன்கிழமை (27) முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்படடது.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாண்டியன் குளம் நட்டாங்கண்டல் ஆரம்பப் பாடசாலைக்கான சுற்று மதில் மற்றும் பாண்டியன் குளம் உள்ளக வீதி ஆகியவைக்காக தலா 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ரி.பிரிந்தாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஏ.தனிநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .