2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

முள்ளிக்குளத்துக்கு மீள்குடியேற்ற அமைச்சர் விஜயம்

Thipaan   / 2015 மே 31 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத், எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் மற்றும் சிலாவத்துறை ஆகிய  கிராமங்களுக்கு நேற்று சனிக்கிழமை (30) சென்ற மீள்குடியேற்ற அமைச்சர் ரி.எம். சுவாமிநாதன் அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும்  ஹுனைஸ் பாறூக் ஆகியோரின் வேண்டுகோளுக் கிணங்கவே மீள்குடியேற்ற அமைச்சர், இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது முள்ளிக்குளம் பூர்வீக கிராமம் தற்போது கடற்படையினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மக்களது பிரதான தொழிலான மீன்பிடியில் ஈடுபடவும் கடற்படை அனுமதி மறுப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மீள்குடியேற்றத்தில் முசலி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட அமைச்சரவை பத்திரத்தை நிறுவி அதன் ஊடாக உரிய தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக், மீள் குடியேற்ற அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் தேவாலயம் என்பவற்றுக்கு மக்கள் செல்லமுடியாமை பற்றியும் பாடசாலைக்கு மாணவர்களை கடற்படை பஸ்ஸே ஏற்றிச்சென்று மீண்டும் ஏற்றி வருவதாகவும் குறைபட்டுக்கொண்டனர்.

இதனை செவிமடுத்த மிள்குடியேற்ற அமைச்சர் நேரடியாக கடற்படை முகாமுக்கு சென்றிருந்தார்.
எனினும் கடற்படை முகாம் பிரதான வாயிலில் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்த பின்னரே அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி கிடைத்தது.

பின்னர் நேரடியாக பாடசாலை மற்றும் தேவாலயம் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டதுடன் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடற்படையினருக்கான வீடமைப்புக்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .