2025 ஜூலை 21, திங்கட்கிழமை

30 வருட யுத்தம் எம் மக்களை கடுமையாக பாதித்துள்ளது

Super User   / 2014 மே 08 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


யுத்தகாலத்தில் உயிரை மாய்தவர்களை விட கொடிய வடுக்களை சுமந்து இன்றும் சிலர் வேதனையை அனுபவித்துவருகிறார்கள் என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

மாங்குளம் பிரதேசத்தில் செயற்கை அவயவங்களை பொருத்தும் அமைதிக்கரங்கள் நல்வாழ்வு நிறுவன கட்டிடத்தை புதன்கிழமை (07) திறந்து வைத்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

30 வருட யுத்தத்தினால் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் எமது மக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உளவளத்துணை மற்றும் செயற்கை அவயவங்கள் பொருத்துவதற்கான இந்த சேவை நிலையம் வன்னிப்பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதானது பாராட்டுதலுக்குரியது.

முடிந்துபோன கொடிய யுத்தம் எம்மவர்களை அனைத்து வழிகளிலும் பாதித்துள்ளது. உயிரிழந்தவர்களை விட கொடிய வடுக்களை சுமந்து இன்றும் வேதனையை சிலர் அனுபவித்துவருகிறார்கள்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மன உழைச்சலுக்குள்ளானதுடன் பலர் தமது அவயவங்களையும் இழந்து தவிக்கிறார்கள். அவர்களை கைதூக்கி விடவேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உள்ளது. இவர்களுக்கான பணியினை நாம் அனைவரும் உணர்வுபூர்வமாக ஆற்ற வேண்டும் என தெரிவித்தார்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .