2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கண்ணிவெடி அகற்றும் 300 பணியாளர்கள் நிறுத்தம்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 12 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான 'ஹலோ ட்ரஸ்ட்' நிறுவனத்தில், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றும் 300 பணியாளர்களை இந்த மாதம் 31 ம் திகதி முதல் வேலையில் இருந்து நீக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து நிதி கிடைக்காமையால் 300 பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாதுள்ளது.     

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களில் தொழில்வாய்ப்பற்று மிகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமர் 800 பேர் வரையில்,  கடந்த 2010ஆம் ஆண்டு 'ஹலோ ட்ரஸ்ட்' கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு வரை இவர்கள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை 31ஆம் திகதிமுதல் பணிநீக்கம் செய்வதற்கான ஒப்புதல் கடிதம் அவர்களிடம் இருந்து பெறப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .