2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

313 முன்னாள் போராளிகள் விடுதலை

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 13 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற  முன்னாள் போராளிகள் 313 பேர் தைப்பொங்கலை  முன்னிட்டு உறவினர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு மற்றும் மருதமடு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற 313 முன்னாள் ஆண் போராளிகளே இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு ஏற்பாட்டில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அமைச்சின் செயலாளர், புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி, வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரேரா, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், தென்மாகாண முதலமைச்சர் சான்லால் விஜயசிங்க, படை உயரதிகாரிகள், இராணுவத்தினர் பொலிஸார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X