2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

35 படகுகளில் முசலி பிரதேசத்திற்கு உலருணவுகள் அனுப்பிவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுகள் 35 படகுகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.

மன்னார் சவுத்பார் மற்றும் வங்காலை கடற்பரப்பினூடாக இவ் உலருணவுகள் படகுகளில் முசலிப் பிரதேசத்துக்கு நேற்று சனிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளதாக அப்பிரதேசசபைத் தலைவர் எஹியான் தெரிவித்தார்.

முசலி பிரதேசத்திற்கான அனைத்துப் பாதைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், 25,000 கிலோ உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ள குஞ்சுக்குளம் மாதா கிராம மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை படகுகள் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பிரதேசசபைத் தலைவர் எஹியான் மேலும் கூறினார்.

கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையைத் தொடர்ந்தும் குளங்கள் உடைப்பெடுத்ததைத் தொடர்ந்தும் மன்னாரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X