Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், இவ்வாண்டு சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டிருப்பதாக, மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்கமாக காணப்படுகின்ற இரணைமடுக்குளம் உள்ளிட்ட பாரிய நடுத்தர மற்றும் சிறுகுளங்களில் மேற்கொள்ளப்பட்ட 2019, 2020க்கான காலபோக அறுவடையை தொடர்ந்து, இவ்வாண்டுக்கான சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவுபெற்றுள்ளன.
அதாவது இரணைமடுக்குளம், கல்மடுக்குளம், அக்கராயன்குளம் புதுமுறிப்புக்குளம், வன்னேரிக்குளம், கரியாலை, நாகபடுவான்குளம், குடமுருட்டிக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசனக்குளங்கள், சிறு நீர்ப்பாசனக்குளங்கள் என்பவற்றின் கீழ் சுமார் 8,688 ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.
இதன்மூலம் ஏறத்தாழ 42 ஆயிரம், மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு சிறுபோகசெய்கை தொடர்பில் பிரதி மாகாண விவசாயம் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்செய்கையை பொறுத்தமட்டில் பெரிய மற்றும் நடுத்தரக்குளங்களின் கீழ் 8,592 ஹெக்டயரிலும் சிறிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் 96 ஹெக்டயரிலுமாக மொத்தமாக 8,688 ஹெக்டயர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.
இவ்வாறு அறுவடைகள் மூலம் சுமார் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மறுவயற் பயிர்ச்செய்கைகள் பல்வேறு செயற்றிட்டங்களினூடாக ஊக்குவிக்கப்பட்டு, சுமார் 1,300 ஹெக்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த காலபோகத்தின் போது 23 ஆயிரத்து 466 ஹெக்டயர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago