2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

48 நாடுகளின் பிரதிநிகள் கிளிநொச்சி விஜயம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வந்த 48 நாடுகளின் பிரதிநிகள் இன்று புதன்கிழமை (13) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து விமானம் மூலம் இரணைமடு விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள், முதல் விஜயமாக இரணைமடுக் குளத்தினைப் பார்வையிட்டனர்.

தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் என்.சுதாகரன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின்போது, இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டம் தொடர்பாகவும்  கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசனம் தொடர்பாகவும் பிரதிநிதிகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதிநிதிகள் செஞ்சோலை சிறுவர் இல்லம், சேவாலங்கா நிறுவனம், மற்றும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஆகியவற்றையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X