2025 மே 02, வெள்ளிக்கிழமை

532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு

Niroshini   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் இன்று திங்கட்கிழமை (28) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்சி முன்னிலையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஜெயதிலக தலைமையில், பொலிஸ் தடவியல் நிபுணத்துவ பொலிஸார் இணைந்து, மன்னார் நகர சபைக்கு சொந்தமான மலக்கழிவகற்றல் நிலையத்தில் வைத்து, தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட சுற்று நிருபத்தின் அடிப்படையில், கொரோனா தொற்று அபாயம் உடைய கடத்தல் பொருள்களை உடனடியாக தீக்கிரையாக்கும் படியான அறிவுறுத்தலின் அடிப்படையில், மேற்படி மஞ்சள் கட்டிகள் முதற்கட்டமாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மன்னார், பேசாலை, தாழ்வுபாடு, தலைமன்னார் கடல் பகுதிகள் ஊடாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் கட்டிகளே, இவ்வாறு  அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X