2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

59.8 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

சண்முகம் தவசீலன்   / 2018 நவம்பர் 21 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்று முறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க இந்த காணிகளுக்கான பத்திரங்களை முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் இன்று (21) கையளித்துள்ளார்.

இந்த காணி ஆவணங்களை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்து அவர்கள் ஊடாக உரிய முறையில் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .