Niroshini / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வடக்கு மாகாணத்தில், உடனடியாக 6 மின்தகன மயானங்களை அமைப்பதற்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாக, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்தார்.
இதற்கமைய, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களின் அனுமதியுடன், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மின்தகன மயானமொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வடக்கில் கொரோனா தொற்று காரணமாக மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக்டிரஞ்சன் தலைமையில் நேற்று (08), அவசரமாக ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் மின்தகன மயானங்கள் காணப்படும் நிலையில், வடமாகாணத்தில் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கைக்கு, அங்கு சடலங்களை எரியூட்டுவது ஈடுகொடுக்க முடியாமல் உள்ளன.
இதன்படி வடமாகாணத்தில் மேலும் 6 மின்தகன மயானம் அமைப்பதற்கு 6 பிரதேச சபைகளுக்கு அனுமதி வழங்கிய போதும், நிதி வல்லமை மற்றும் திட்ட விருப்பம் இருந்தால் சபைகள் உடனடியாக பணியை முன்னெடுக்கலாம்.
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, நல்லூர் ஆகிய பகுதிகயில் உள்ள பிரதேச சபைகளுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபைக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தனிட் வினவிய போதே, அவர்மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சபையின் வைப்பில் நிதி உள்ளது என்றார்.
எதிர்வரும் 16ஆம் திகதி சபை அமர்வில் பிரோரனை முன்வைக்கப்பட்டு, சபையின் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிதியை எடுத்து, மின்தகன மாயானத்தை அமைக்கவுள்ளதாகவும், தவிசாளர் தெரிவித்தார்.
அதற்கான இடமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அவர் கூறினார்.
34 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
40 minute ago
49 minute ago