Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 600 விவசாயிகளுக்கான விவசாய இழப்பீட்டு காசோலைகள், மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் காப்புறுதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்தாண்டு டிசெம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் முகமாக, விவசாயிகள் காப்புறுதி அமைப்பினரால் தகவல்கள் திரட்டட்டப்பட்டன.
இதன் முதற்கட்டமாக, முள்ளியவளை, ஒலுமடு, புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு, கொக்குத்தொடுவாய், குமுழமுனை கமக்கார அமைப்புகளின் கீழ் உள்ள 600 விவசாயிகளுக்கான இழப்பீட்டு காசேலைகள் வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கான காசோலைகள் மாவட்ட செயலத்திடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விரைவில் விவசாயிகளிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் காப்புறுதி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
4 minute ago
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
54 minute ago
3 hours ago