2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் 63,920பேர் வாக்களிக்க தகுதி

Menaka Mookandi   / 2015 ஜனவரி 07 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் 63ஆயிரத்து 920 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரன் சசீலன் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாளை வியாழக்கிமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பிரதேச செயலகப்பிரிவில் 130 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்தந்த வர்ககளிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டியும் மற்றும் கடமை உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 63ஆயிரத்து 920 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதன்படி கரைத்துறைப்பற்றில் 20568 பேரும், புதுக்குடியிருப்பில் 19443 பேரும், ஒட்டுசுட்டானில் 9836 பேரும், துணுக்காயில் 6590 பேரும்,மாந்தை கிழக்கில் 4492 பேரும், வெலிஓயாவில் 2991 பேரும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .