Editorial / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ், 387 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு 3.86 மில்லின் ரூபாய் செலவில், ஏழு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், மேற்படி செயற்றிட்டத்தின் கீழ், உவர் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு, உவர் நிலப்பயிர் நிலங்களில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, 0.74 மில்லியன் ரூபாய் செலவில் விதைநெல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், கைவிடப்பட்ட காணிகளில் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு, 205 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, உழுந்து, நிலக்கடலை, பயறு மற்றும் விவசாய உபகரணங்கள் என்பன 0.947 மில்லியன் ரூபாய் செலவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago