2025 ஜூலை 16, புதன்கிழமை

7500 கிலோகிராம் உருளைக்கிழங்க விநியோகம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


கடும் வரட்சியை கருத்தில் கொண்டு, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு வழங்குவதற்கென 7500 கிலோ உருளைக்கிழங்கு முசலி பிரதேசச் செலாளரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவை புதன்கிழமைi(1) மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

மேற்படி உருளைக்கிழங்கு முசலி பிரதேசத்தில் உள்ள 21 கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

ஒரு குடும்பத்துக்கு 3 கிலோ உருளைக்கிழங்கு வீதம்  மக்களுக்கு உருளைக்கிழங்கு கையளிக்கப்பட்டது.

முசலி பிரதேசச் செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன், முசலி பிரதேச சபை தவிசாளர் எம்.எஹியாபாய்  ஆகியோர் உருளைக்கிழங்குகளை மக்களிடம் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .