2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ரூ.9 மில்லியன் நிதியில் அக்கராயன் கமநலசேவை கட்டடம்

George   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி அக்கராயன் கமநல சேவைகள் திணைக்களத்திற்கான கட்டிடம் 9 மில்லியன் ரூபாய் செலவில் கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் அமைக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்கராயன் கமநல சேவைகள் திணைக்கள கட்டடம் இறுதி யுத்தத்தால் கடுமையாக சேதமடைந்தது.

யுத்ததால் சேதமடைந்த கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கமநலசேவைகள் நிலைய கட்டடங்கள் அமைக்கும் பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் மத்திய விவசாய அமைச்சால் மேற்கொள்ளப்பட்டது.

காணி பிணக்கு காணப்பட்ட காரணத்தால் அக்கராயன் கமநல சேவை நிலைய கட்டடம் அமைக்கப்படுவதில் சிக்கல் நிலைகள் காணப்பட்டன.

இந்நிலையில், மாவட்ட அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையால் அக்கராயன் கமநல சேவைகள் திணைக்கள காணி தொடர்பில் காணப்பட்ட பிணக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அதனை தொடர்ந்து கட்டிடம் அமைப்பதற்கான நிதி பெறப்பட்டு, கட்டடம் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கட்டிடம் அமைக்கும் பணிகள் அடுத்த வருட முதலாம் காலாண்டுக்குள் முடிவுடையும் என எதிர்பார்ப்பதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .