2025 மே 15, வியாழக்கிழமை

902 கி.கி மஞ்சள் கட்டி மூடைகள் மீட்பு

Editorial   / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தாழ்வுபாடு கடற்கரையில், நேற்று  (03), இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட   902 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாழ்வுபாட்டு கடற்கரைக்கு வந்த படகொன்றை சோதனையிட்ட  கடற்படையினர், படகில் இருந்து 19 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 902 கிலோ கிராம் மஞ்சள்  கண்டுபிடித்ததுடன், படகில் இருந்த 02 சந்தேக நபர்களையும் கைதுசெய்தனர்.

இவ்வாறு  கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 48 வயதுடைய மன்னார் - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

மீட்கப்பட்ட மஞ்சள் பொதிகள் யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், சந்தேக நபர்கள் தனிமைப்படுத்தலுக்காக மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .