Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 03 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பகுதியில் அமைந்துள்ள ATM இயந்திரத்தின் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தியமை தொடர்பில் வங்கி முகாமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள உடையார் கட்டு சந்திக்க அருகாமையில் அமைந்துள்ள ATM இயந்திரத்தின் கண்ணாடியை நேற்று இரவு விசமிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு இலங்கை வங்கியின் முகாமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.
ATM இயந்திர பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago