2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 03

Menaka Mookandi   / 2016 மார்ச் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1575: முகலாய சக்கரவர்த்தி அக்பர், வங்காள இராணுவத்தை தோற்கடித்தார்.

1857: பிரிட்டனும் பிரான்ஸும் சீனா மீது போர்ப் பிரகடனம் செய்தன.

1918: ஜேர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யாவுக்கி டையல் பிரெஸ்ட்- லிடோவ்ஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால் முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன.

1938: சவூதி அரேபியாவில் பெற்றோலிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

1939: ஆங்கிலயே எதேச்சதிகாரத்திற்கு எதிராக மும்பையில் மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

1943: லண்டனில்வான் வழி தாக்குதலிலிருந்து பாதுகாப்பு தேடி கட்டிடமொன்றுக்குள் புகமுயன்றவர்களில் 173 பேர் நெரிசலில் சிக்கி பலி.

1975: துருக்கிய விமானமொன்று பாரிஸ் நகருக்கருகில் வீழ்ந்ததால் 345 பேர் பலி.

1991: சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.

1992: பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.

2002:  ஐ.நா.வில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர்.

2005: அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட், முதல் தடவையாக தனியாளாக விமானமொன்றில் எங்கும் நிறுத்தாமல் உலகை சுற்றிப் பறந்துமுடித்தார்.

2009: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அறுவரும் பொதுமகன்கள் இருவரும் பலியாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .