2021 ஜூன் 14, திங்கட்கிழமை

‘ஆன்மாவைக் கௌரவிப்போமாக’

Editorial   / 2017 மே 30 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுக்கு வேண்டப்பட்டவர்களைக் கண்டால் மட்டுமே, முகம் மலரப் புன்முறுவல் செய்வதே பலரதும் குணாம்சமாகும். மற்றப்படி எவரையும் கண்டு கொள்வதேயில்லை. 

ஆனால், எவரைப் பார்த்தவுடன் முகம் மலர, புன்முறுவல் பூப்பதும் தங்கள் கைகளை அசைப்பதும் குழந்தைகளின் இயல்பாகும். நட்புப் பூணுவதில் இவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

மேலை நாட்டவர்களில், முகம் தெரியாத நபர்களைக் கண்டாலும், வந்தனம் செய்வது அந்நாட்டவர்களின் பரந்த மனதின் உயர் வெளிப்பாடாகும்.ஒருவரை ஒருவர் கண்டு கொண்டால் அவர்களின் ஆன்மாவைக் கௌரவிப்போமாக. 

முறுவல் செய்தால் என்ன குறைந்துவிட்டது.பேதம்பார்க்கும் குணம் இதனால் அற்றுப் போய்விடும்.அன்பின் வெளிப்பாடு புன்முறுவல்தான்.      

வாழ்வியல் தரிசனம் 30/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .