2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கந்தசஷ்டி சூரசம்ஹாரம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 11 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

கந்தசஷ்டி விரதத்தின் 6ஆம் நாளான சூரன்போர் விழா இன்று வியாழக்கிழமை மாலை வவுனியா நகர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்றது. பெருமளவிலானவர்கள் இந்த நிகழ்வின் கலந்து கொண்டனர்.

சூரன் பல அவதாரங்களை பெற்று முருகப்பெருமானுடன் போரிட்டதாக வரலாறு கூறுகின்றது. இறுதியாக சூரன் மரமாக உருவெடுத்து போரிட்டபோது, அம்மரத்தினை முருகப்பெருமான் பிளந்து ஒருபகுதியை சேவலாகவும் மறுபகுதியை மயிலாகவும் தனதாக்கிக் கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

நாளை காலை பாறணையுடன் கந்தசஷ்டி விரதம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .