2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (25.03.2012 - 31.03.2012)

A.P.Mathan   / 2012 மார்ச் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (25.03.2012 - 31.03.2012)


அஸ்வினி, பரணி கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன் ஒளிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் புதிய வழிகள் உருவாகும். இதனால் லாபம் ஏற்படும். மற்றும் அழகிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியில் இருந்து இன்பமான செய்திகள் வந்து சேரும். வார இறுதியில் உடல் நிலை மோசமடையும். மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும். வீண் சிரமங்கள் ஏற்படும். மயக்கம் காணப்படும். திருடர்களினால் வீணான அலைச்சல்கள் காணப்படும். மேலும் பணத்திற்கு பிரச்சினைகள் உண்டாகும். தலைவலி இதனால் மனதளவில் பயம் மேலும் வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எனவே உடல் ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு தொடக்கத்தில் மனதளவில் கஷ்டங்கள் உண்டாகும். இருந்த போதிலும் மனதிற்கு பிடித்த விடயங்களில் மனதை செலுத்துவீர்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களிடையே அன்யோன்யம் கூடுதலாக காரியங்களில் சாதனைகள் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து செய்திகள் வரும். பிறருடைய உதவி எதிர்பார்க்கும் சூழ்நிலைகள்  உருவாகலாம். வீண் மனஸ்தாபங்கள் மற்றும் சங்கடங்கள் தோன்றும். உடல் உஷ்ணம் மற்றும் காய்ச்சல், தலைவலி ஆகியவை உண்டாகும். இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நிலை உருவாகலாம். தேவையில்லாத  செலவுகள் உண்டாகும். சாப்பாட்டில் வெறுப்புகள் காணப்படும், இதனால் உடல் நலம் பாதிப்படையும். மனதளவில் கஷ்டம் ஏற்படும். அதனால் மனதை ஒருநிலைப்படுத்தி சாந்தமடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றியடைவீர்கள். இதனால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் அதிகாரிகளிடையே சுமூகமான உறவை மேற்கொள்வது நல்லது. இல்லையெனில் நஷ்டங்களை அடைய நேரிடும். அயல்தேசங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் நலத்தில் குறைபாடு காணப்படும்;. எனவே கவனத்துடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் தாழ்ந்த உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு பிரச்சினைகள் உருவாகும்;, முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வியில் போய் முடியும். எனவே புதிய காரியங்கள் எதிலும் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. பெண்களினால் மகிழ்ச்சி உண்டாகும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள்  நடைபெறும். பணம் ஈட்டுவதில் ஈடுபாடு காணப்படும், வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். வியாபாரம் விருத்தியடையும், இதனால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வார இறுதியில் சில நல்ல முடிவுகளை எடுக்க நேரிடும். இதனால் மனம் மகிழ்ச்சியடையும். சுற்றுலா சென்று மனதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு மகான்களுடைய தரிசனங்கள் கிடைக்கப்பெறும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும்பொழுது கவனமாக இருத்தல் அவசியம். அதிகாரிகளின் பேட்டிகளினால் காரிய சாதனைகள் உண்டாகும். பெண்களுடன் விவாதங்களில் ஈடுபட நேரிடும்.  மற்றவர்களினால் பிரச்சினை உண்டாகும். துன்பங்கள் நிகழ நேரிடும், மனம் சஞ்சலம் அடையும். தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. வேண்டாத செலவுகளால் வேதனையடைய நேரிடும்;. மற்றும் வார இறுதியில் உடன் பிறந்தவர்களுடைய வருகை ஏற்படும், இதனால் மகிழ்ச்சி நிலவும், அரசினரால் ஆதாயம் கிடைக்கும். வார இறுதி சுமாராகச் செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு தீயவர்களுடைய நட்புக்களால் நஷ்டங்கள் உண்டாகும். இதனால் பல வகையில் சிக்கல்கள் ஏற்படும். பொருள்கள் திருட்டு போகும் சூழ்நிலை உருவாகலாம். மனதளவில் கஷ்டம் தோன்றும். வார இடையில் நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைக்கும். இதனால் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். சங்கீதத்தில் ஆர்வம் உண்டாகும், அதனால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள், மகிழ்ச்சியான செய்திகள் வரும்,  தனலாபம் காணப்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். அதிகாரிகளின் பேட்டி காணும் சூழ்நிலை உருவாகலாம், காரியங்கள் வெற்றியடைதல், அயல்நாட்டில் இருந்து செய்தி வருதல்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்


சந்திராஷ்டமம்
மார்ச் 24ஆம் திகதி மாலை 02.57 மணியிலிருந்து மார்ச் 26ஆம் திகதி காலை 03.48 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

தேடி சென்றும் உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு உடல் நிலையில் சிறு பாதிப்புகள் காணப்படும். பணப் பிரச்சினை ஏற்படும். தலைவலி, காய்ச்சல் மற்றும் மனதுக்கு பயம் போன்றவை உண்டாகும்.  தீயவர்களுடைய நட்பினால் நஷ்டங்கள் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் காணப்படும்;. எனவே தீய நட்புக்களைத் தவிர்ப்பது நல்லது. பிரயாணம் செல்லும் நிலை உருவாகலாம் இதனால் லாபம் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். அப்பொழுது  கவனம் தேவை. சுற்றத்தினர் நண்பர் வருகை காணப்படும். ஆடை, ஆபரணங்கள் சேகரித்தல். நண்பர்களுடன் வெளியில் செல்லும் நிலை உருவாகும். மேலும் நல்லவர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். சுகமான உணவு ஆகியவைகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்


சந்திராஷ்டமம்
மார்ச் 26ஆம் திகதி காலை 03.48 மணியிலிருந்து மார்ச் 29ஆம் திகதி மாலை 04.31 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு துக்கமான நிகழ்வுகள் ஏற்படும்;. மேலும் செய்யும் செயல்களில் தவறுகள் உண்டாகும். மனதில் சில சஞ்சலங்கள் காணப்படும். அலைச்சல்கள் காணப்படும்.  பிறர் உதவி எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். மேல் அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும்  வீணான பிரச்சினைகள் தோன்றி மறையும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம்.   வேண்டாத உணவினால் பிரச்சினைகள் உண்டாகும். வார இறுதியில் பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். வேண்டாத பேச்சுகளால் மனஸ்தாபம், சிலவிதமான சிக்கல்கள் காணப்படும்.  தீயவர்களின் நட்பு, இதனால் தொழில் நஷ்டமடையும். பிரயாணம் செல்லும் நிலை ஏற்படலாம். இதனால் உடல் சோர்வடையும்.  

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


சந்திராஷ்டமம்
மார்ச் 24ஆம் திகதி மாலை 04.31 மணியிலிருந்து மார்ச் 31ஆம் திகதி காலை 02.44 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும், புதிய தொடர்புகள் ஏற்படும். இதனால் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை நிலவும். நல்ல நண்பர்களிடையே சேர்க்கை உண்டாகும். சுவையான உணவு உண்ணும் நிலை உருவாகும். மனதளவில் அலைச்சல் ஏற்படும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மனம் அமைதி அடையும். வீணான அலைச்சல்கள், செய்யும் செயல்களில் தவறுகள், முயற்சிகள்; தோல்வியடையும். இருந்த போதிலும் அரசினரால் ஆதாயம் கிடைக்கும். காரியத்தில் வெற்றிகள் தேடி வரும். பெரியோர்களின் சந்திப்புகள் நிகழும், இதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும்.  மகான்களின் தரிசனம் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும், மகிழ்ச்சியான வாரம் இது.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு புதிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம். மேலும் புதிய முயற்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது. பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம். இதனால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். சுகமான உணவுகளால் மனம் மகிழ்ச்சியடையும். பெண்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களினால் பிரச்சினைகள் காணப்படும். எனவே எந்த ஒரு காரியத்தையும் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும். மனம் சஞ்சலம் அடைதல், வேண்டாத செலவுகள் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் ஆகியவை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்   
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் வாக்குவன்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் பிரச்சினைகள் ஏற்படும். வேண்டாத உணவினால் வயிற்றில் பிரச்சினைகள் மற்றும்; மனசங்கடங்கள் உண்டாகும். இடம் விட்டு வேறு இடம் மாறுதல் உண்டாகும். சுவையான உணவு உண்ணுதல், பெண்களினால் மகிழ்ச்சிகள் காணப்படும். வியாபாரத்தில் புதிய வழி கிடைக்கும், இதனால் லாபம் கிடைக்;கும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுவையான உணவு கிடைத்தல், பெண்களால் உதவி, இன்பம் ஆகியவை கிடைக்கும். முயற்சி செய்தால் அனைத்திலும் வெற்றியடையலாம். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மகிழ்ச்சி நிலவும், மனம் அமைதியடையும்.

அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு நல்லவர்கள் சேர்க்கைகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் வருகையினால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று மகான்களின் தரிசனங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். உடலளவில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். அதிக பண லாபம் உண்டாகும். வீண் அலைச்சல் என்று நினைக்கும் காரியங்கள் கூட லாபத்தை பெற்றுக் கொடுக்கும்.  தடைகள் கூட நன்மையாகவே அமையப்பெறுவீர்கள். பயணங்களினால் மனம் மாற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். எனவே இந்தவாரம் உங்களுக்கு மிகவும் நன்மையாகவே அமையும்.

அதிர்ஷ்ட திகதி: 2, 11, 20, 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .