2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘அதீத பணச் செலவீனம் புழுக்கத்தை ஏற்படுத்தும்’

Editorial   / 2017 ஜூலை 18 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் முயற்சியுடன் உழைத்து உயர்ந்தவர்கள் அடையும் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கைபோல, திடீர் பணக்காரர்களுக்கு வாழ்வு அமைதியானதாக அமைந்து விடுவதில்லை. 

கஷ்டப்பட்டு உழைத்தவன் இஷ்டப்படி செலவழிக்க மாட்டான். ஆனால், இன்று ஏதோ ஓர் வழியில் திடீர் என, செல்வத்தைக் கண்டவர்களுக்கு வாழும் முறை தெரியாமலே இயங்குவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். 

சலனமற்ற, நிர்மலமான வாழ்க்கை வாழும் மாந்தர்கள் இன்ப, துன்ப நுகர்வுகளைக் கண்டு தெளிந்தவர்கள். பணம் இவர்களை ஆட்சி செய்ய முடியாது. 

பணம் மனிதரைப் பொங்கி எழச் செய்து, மயங்க வைக்கும் அசுரன். சிங்கம் போன்றவரையும் அசிங்கமாக்கிவிடும். அதீத பணச் செலவீனம் மனதில் புழுக்கத்தை ஏற்படுத்த வல்லது. காசுக்காரர்களைப் பார்த்து யாசகன் உழைக்காமல் ஏக்கப்படக்கூடாது. 

   வாழ்வியல் தரிசனம் 18/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X