2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அதிகாரத்தை விரும்புபவர் சமாதானத்தை விரும்பார்

Princiya Dixci   / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

போருக்கான ஆயுதங்களை வாங்குவதனாலேயே பல சராசரி பணபலம் உள்ள நாடுகளும் பின்தங்கிய நாடுகளும் இன்று பிச்சைக்கார நிலைக்கு வந்துவிட்டன.  

ஆனாலும் வீம்பு மட்டும் இந்த நாடுகளுக்குக் குறையவில்லை. வல்லரசு நாடுகளுக்கு நாங்கள் என்ன குறைந்தவர்களா? எவருக்கும் நாம் பயப்படமாட்டோம், என்று வேறு கூறி,  தமது நாட்டு மக்களைத் திருப்திப்படுத்திக் கொள்கின்றன. இது வேடிக்கையாகத் தெரியவில்லையா? 

தாங்கள், இதனால் வலிய நாடுகளிடம் கடன்பட்டே அடிமையாகும் உண்மையை எதற்காக ஒத்துக்கொள்ள மறுக்கின்றன? 

அரசியல் என்னும் குட்டையில் பொய்யுரை புனைந்து, அப்பாவி மக்களை ஏமாற்றுவதை மக்கள் உணர்வதாயும் இல்லை. அதிகாரத்தை விரும்புபவர் சமாதானத்தை விரும்பமாட்டார்கள். 

 

வாழ்வியல் தரிசனம் 17/11/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .