Princiya Dixci / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏகாந்தமான சூழ்நிலையில்த்தான் மேதைகள்இ ஞானிகள் பல விடயங்களைக் ஞானத்தினால் கண்டு உணர்ந்தார்கள்.
அதிகாலையில் எழுந்திருப்பது சிலருக்கு சிரமமான காரியமாக இருக்கலாம். சோம்பலை விட்டொழித்து அதிகாலையில் துயில் நீத்தால் சுறுசுறுப்புஇ சந்தோசம்இ மனவுறுதி எல்லாமே எமக்குள் ஒன்று சேர்ந்து வந்து விடுகின்றன.
பிற ஒலிகள்இ சத்தம் சந்தடிகள் எழாத அதிகாலை வேளையில் படித்தால் இலகுவாக மூளையில் பதிவேற்றம் பெற்றுவிடுவதுடன்இ கல்மேல் எழுத்தாகவும் பதிந்தும் விடுகின்றது.
மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் கற்பதற்கான மனநிலையையும் ஆரோக்கியத்தையும் அதிகாலையில் கற்றல் வழங்கிவிடும்.
அதிகாலையில் கற்பவர்களை காலம் கைகொடுத்துத் தூக்கி விடும்.
வாழ்வியல் தரிசனம் 19/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .