2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கும் ஏமாளிகள் பலருண்டு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது வாழ்க்கையை ஸ்திரமாக்கிக் கொள்ள எதுவிதமான பிரயத்தனங்களையும் செய்யாமல் ஏதாவது பெரிய அதிர்ஷ்டம் கிட்டுமென எதிர்பார்த்தே காலத்தைக் கரைக்கும் ஏமாளிகள் பலருண்டு.

இத்தகைய நபர்கள், மதுபோதையில் இருப்பவர்களை விட, சோம்பல் எனும் போதையில் வாழும் மோசமான வாழ்வை ஏற்பவர்களுமாவர்.

அநேகர், தமது வேதனத்தில் ஒரு பெரும் தொகைக்கு அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களை வாங்கிவிடுவதுமுண்டு.

எந்த அனுகூலமும் வந்தால் வரட்டும். வாழும் காலத்தை வீணாக்காமல் உழைப்பதே மேலானது என எண்ணும் மனப்பக்குவத்தை உணர்ந்தால், அதிர்ஷ்டத்தின் மீதான மோகம் வரவே வராது.

மெய்வருந்தி உழைப்பதே மேலான இலாபத்தை நல்கும்.

வாழ்வியல் தரிசனம் 13/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .