2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘அன்பைச் சொரிபவர் கோபம் தார்மீகமானது’

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை ஆண்டு வருபவர், தனது கோபத்தைக் கட்டுப்படுத்தாது விட்டால், அவரது கேடயம் பிடுங்கி எறியப்படும்.

பலரது வாழ்க்கை தேவையற்ற கோபங்களால் கேவலமாகி விடுவது பரிதாபம். ‘எனக்கே எல்லாம் தெரியும்; அடுத்தவன் என்ன சொல்வது’ எனும் மேலாதிக்க சிந்தனை, தன்னைத் தானே உணரவிடாமல்ச் செய்துவிடுகின்றது.

சமூகத் தவறுகளைக் கண்டும், வாய்மூடியாக இருப்பவர்கள், தனக்கு மட்டும் சிறிய துன்பம் வந்தால் போதும், சீறி எழுந்து வாய் வீரம் பேசுவதால், பிறர் வெறுப்பைத்தான் சம்பாதிப்பார்கள்.

சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடுபவர்களின் சினம் நியாயமானது. வன்முறைகளைக் கண்டு கொள்ளாதவன், சமூக விரோதிகளின் பங்காளியாகிறான். நீதியை உயரத்துச் சொல்பவனைத்தான் குழப்பவாதி எனச் சாயம் பூசுகின்றார்கள். நல்லதைச் சொல்ல வேண்டும் என்ற ஆதங்கம், ஆத்திரத்தில் உருவாகுவது இல்லை.

அன்பைச் சொரிபவர் கோபம் தார்மீகமானது. உண்மையின் திறனை, அவர்களின் பேச்சு உணர்த்தும். கோபங்கள் எங்களை ஆள இடமளித்து விடக்கூடாது.

வாழ்வியல் தரிசனம் 24/04/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X