2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘அரவணைப்பில் சரணடையுங்கள்; நல்லதே நடக்கும்’

Editorial   / 2018 ஜனவரி 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாசக்தி சகல வல்லமைகளையும் கொண்டது. இதனால் உலகை மட்டுமல்ல, முழுப் பிரபஞ்சங்களையும் அசைத்துவைக்க முடியும். அதுமட்டுமல்ல, அவைகளை அழிக்கவும் மீண்டும் புதுப்பிக்கவும் வல்லது.

மகாசக்தியின் அளவை மனித மூளையால் அளவிட முடியாது. இதனை இயற்கை என்பர் ஒருசாரார். ஆனால், ஆன்மீகவாதிகளோ, இந்த மகாசக்தியைப் படைத்தவர் கடவுள்தான் என அறுதியிட்டுச் சொல்கின்றனர்.

இது உருவங்களை அருவுருவாக்கும். உயிர்களைப் படைக்கும். அப்புறம் அவைகளையே அழிக்கும். ஆயினும் உயிர்களைச் சுமக்கும் உடலைத்தான் இல்லாமல்ச் செய்கின்றது.இதனையே அழித்தல் என்கின்றோம்.

தீயோருக்கு அதிக பட்ச தண்டனைகளைக் கொடுத்தாலும் கூட, சாந்தசொரூபி, பேரன்பின் முழுவடிவம், கருணையின் உருவம், பக்திக்கு முன் உருகும் மென்மைத் தன்மையது. இதன் அரவணைப்பில் சரணடையுங்கள்; நல்லதே நடக்கும்.

வாழ்வியல் தரிசனம் 01/01/2019

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X