2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘அறம் அசுர சக்தியைவிட மேலானது’

Editorial   / 2017 டிசெம்பர் 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனப்பற்று என்பது, தான் சாராத இனத்தைக் குறிவைத்து அடிப்பது என்றே கருதிச் செயற்படும் பேரினவாதத் தலைவர்கள், இன்னமும் உலக யதார்த்த அரசியல் ஞானம் அற்றவர்கள்தான்.  

எங்களை அறியாமலே பலகோடி அவதானக் கருவிகள் எங்கள் நடத்தைகளைக் கண்காணிக்கின்றன. ‘நான் எதுவும் செய்வேன், எவரும் சொல்ல முடியாது’ என்பது போன்ற, சில துஷ்டர்களின் நடவடிக்கைகள் சில காலம் மறைக்கப்படலாம். ஆனால் நவீன உலகில் இந்த மாயச்சதிகள் எடுபடாது.  

பதவிகள், திடீரெனச் சேர்ந்த அடாத வரவுகள்போல், தங்கள் கண்முன்னே கரைந்து போவதைக் கண்டும்கூட, மாயப்படுக்கையிலேயே, புரண்டு படுக்கின்றார்கள்  

பாவங்களைப் போக்குவதைப் பின்னர் கவனிப்போம். இப்போது செய்வதைத் ​தொடர்ந்து செய்வோம் என எண்ணினால், அறம் அவர்களை ஒதுக்கி விடும். அறம் அசுர சக்தியைவிட மேலானது. 

வாழ்வியல் தரிசனம் 15/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X