2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘அறிவு பொதுவானது’

Editorial   / 2018 மே 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முடிவு எதுவெனத்  தெளிந்து, தெரிந்து கொள்ள விழையாது, ஆய்வுகளை இறுதி செய்யக் கூடாது. எதையும் ஆராயாது, கண்டபடி முடிவுகளைச் சொல்வது, குடிகாரன் பிதற்றுவதற்குச் சமமானது. ஆய்வு மேற்கொள்பவர்கள் அதிகம் படிக்க வேண்டும்;அனுபவசாலிகளுடன் பழகிப் பேசவும் வேண்டும். 

ஆய்வுகளில் சிலசமயம் தொய்வு ஏற்பட்டாலும் மனம் சோராது இயங்கி, முன்செல்ல வேண்டும். ஆராய்ச்சி எனும் பெயரில், கண்டபடி பேசுகிறார்கள். கேட்பவர்களுக்கு அது கஷ்டமாக இருக்கிறது; குழப்பியடிப்பது ஆய்வு அல்ல.   

ஒழுங்காகத் தெளிவாக ஆராய்ந்து, மேற்கோளுடன் சொல்வதே முறையானது. ஆன்மிகம் பற்றிப் பேசும்போது, அவதானம் தேவை. ஆன்மீகம் உணர்வு சார்ந்தது. கருத்துச் சொல்லும்போது, அவதானம் அவசியம். பிறமதங்களையும் பின்பற்றும் மக்களையும் எக்காரணம் கொண்டும் கேலி கிண்டல் செய்து, தவறான கருத்துகளைக் கூறுவதை அறவே அகற்றுக. எல்லாமே எமக்குத் தெரியும் என்ற மமதையில் பேசற்க. அறிவு பொதுவானது. எல்லோருக்கும் அது உண்டு.

வாழ்வியல் தரிசனம் 28/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .