Editorial / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வாழ்க்கையில் எமக்கு கிடைக்கும் வெற்றிகள், தோல்விகள் அதனால் வருகின்ற இன்ப துன்பங்கள், எமக்குள் பல உருவங்களை வழங்கிவிடுகின்றன.
அவைகள் நிரந்தரமானவைகள் அல்ல. சிலர் எங்களைப் பாராட்டலாம்; கேலி, கிண்டல் செய்யலாம். அவை, அவர்களால் உருவாக்கப்பட்ட எம்மைப்பற்றிய வடிவங்கள். இவற்றில் போலியானவையும் நிஜமானவையும் இருக்கும்.
ஆனால் நான், என்னைப்பற்றி, என்ன உண்மையான உருவம் கொண்டுள்ளேன் என்பதை உணரவேண்டும். அல்லவா?
எங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் போலியான கெட்ட குணங்களை அறவே அகற்றினால் மட்டுமே, எங்களது அழகிய வடிவம் ஒளிவீசும்.
அதை உங்களால் சுவீகரிக்க முடியும். எவரையும், இந்த முழு உலகையும் கவரும் ஆற்றல்கள் உங்களுக்கு உண்டு. நம்புங்கள்.
வாழ்வியல் தரிசனம் 22/08/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .