Editorial / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
குரு மீதான நம்பிக்கைக்கும் அவர் மீதான சரணாகதிக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. பலரும் ஒருவர் மீது தாங்கள் நிரம்ப நம்பிக்கை கொள்வதாகச் சொல்லிக் கொள்வார்கள்.
இந்த நம்பிக்கை எந்த நேரமும் தளர்வடையலாம். கால, சீதோஷ்ண நிலை திடீர்திடீர் என மாற்றமடைவது போல, இதனால்தான் பலரும் தங்கள் ஆன்மீகத் தலைவர்களையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.
நல்ல சீஷ்யன் ஓர் ஆசானிடத்தில் பூரண சரணாகதி அடைந்தால் மட்டுமே, அவனால் ஆசானின் முழு கிருபைகளையும் பெற்று, உய்யமுடியும். சுவாமி விவேகாநந்தர், சுவாமி இராமகிருஷ்ண பரம ஹம்சரிடம் பூரண சரணாகதி அடைந்தமையினாலேயே, உலகம் போற்றும் ஞானியாக முடிந்தது.
அறைகுறை பக்தி, விசுவாசம் எவரையும் மேல்நோக்கிய பயணத்துக்கு இட்டுச் செல்லாது. நிர்மல விசுவாசமே நல்லதை நடாத்திக் காட்டும்.
வாழ்வியல் தரிசனம் 10/10/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
48 minute ago