2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆண்டவனுக்கு, மனிதன் எதைத்தான் வழங்குகின்றான்?

Editorial   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓசைகள் பலவிதம். இதில் இரசனைக்குரியது; இரசனைக்கு ஏற்றதல்ல எனப் பலவகையுண்டு. கடலில் இசைபாடும் பேரலைகள் நீரோடையின் சலசலப்பு ஓசை, வீச்சாடனான இடியோசை. 

ஆனால், இடியோசையும் மின்னலும் மனிதனைப் பயமுத்த அல்ல; பயன் அளிக்கவேயாகும். இதனாலன்றோ, மழை பூமியை முத்தமிட்டுச் செழிப்பூட்டுகின்றது. இவை இறைவன் தந்த இயற்கை ஓசைகள்.

ஆனால், இந்த மானுடர் கொடுக்கும் ஓசை எது? விமானக்குண்டு வீச்சின் ஓலக்குரல், துப்பாக்கிகளின் வேட்டுகள் இவை மனிதன் உலகுக்குக் கொடுக்கும் தண்டனை ஒலிகள். ஆண்டவன் எதைத் தருகின்றான்;  பிரதியுபகாரமாக மனிதன் எதைத்தான் வழங்குகின்றான்? 

வாழ்வியல் தரிசனம் 01/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X