Editorial / 2017 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தத் தேகமும் மனமும் மாறும் தன்மையுடையது. மனசும் அடிக்கடி மாறியபடியே இருக்கின்றது. தேகமும் பராயம் மாறமாற, அதன் உருவமும் மாறிவிடுகின்றது. முதுமை வரும் என்பதை இளையவர்கள் உணர்வதில்லை.
அறிவு கூட, மேல் நோக்கியபடி செல்லும். ஆனால், அது, தனது அந்தத்தை எட்டுவதில்லை. இவை, எல்லாமே இயற்கையுடன் இயைபுபட்டவை.எனவே, வாழும் நாட்களில் உடலையும் மனத்தையும் ஸ்திரமாக்க முடியுமா என்பது கேள்விக்குறி? எதுவும் முடியாது எனச் சொல்ல முடியாது.
ஆன்ப பலம் என்ற ஒன்று உண்டு. மனதில் தூய்மையை ஏற்றி வைக்க, மனிதரால் முடியும். படிப்படியாக மனிதன், தன்னை மேலும்மேலும் மெருகேற்றுவது, பணம் பொருளை மட்டுமல்லாது அதைவிட மேலான இதயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்.
மனம் தூய்மையானால் தேகமும் தேஜசாகும். இறைநற்கருணை கூடிவரும்.
வாழ்வியல் தரிசனம் 16/08/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .