Editorial / 2017 டிசெம்பர் 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வயது முதிர்ச்சியடைய முதிர்ச்சியடைய முதியவர்கள் நல்ல மனப்பக்குவத்தை அடைய வேண்டும். இருக்கிற கொஞ்ச காலத்திலேயாவது எல்லா உயிர்களையும் சமமாகக் கருத வேண்டும்.
ஆனால், கடைசி மூச்சு இருக்கும்வரை, தானும் தனது மனைவி பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை மட்டும் கருதி, முழுச் சுயநல சிந்தையுடன் வாழ்வது அறியாமையின் உச்சம்தான்.
எவ்வித ஈகைக் குணமும் இல்லாமல் காசை மட்டும் பெரிதாக எண்ணி, நெருங்கிய உறவுகள், ஊராருக்குக் கூட, எந்தவிதமான நல்லதைச் செய்யாமல் உலோபித்தனமான வாழ்க்கை வாழ்வதால் அவர்தம் ஆத்மா எப்போதுதான் ஈடேறுவதோ?
கண்ணுக்குத் தெரியாமல் வாழ்ந்துவரும், இரக்கமற்ற பிள்ளைகளுக்காக இன்னமும் சொத்துச் சேர்ப்பதால், இனியும் சொர்க்கம் வரும் என எண்ண முடியுமா? இந்த மாயையை அறுத்து, எந்த உயிரையும் நேசித்தால்த்தான், ஆன்மாக்கள் சுகானுபவங்களைச் சுவீகரிக்கும்.
வாழ்வியல் தரிசனம் 27/12/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025