2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘இருவருமே காதலராகி விட்டனர்’

Editorial   / 2017 டிசெம்பர் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனிபடர்ந்த மலைநாட்டின் வீதியோரத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள் பருவ மங்கை. அவள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அந்த வீதிவழியே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் அவள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டான். உதவி வேண்டுமா எனக் கேட்டால் தப்பாக எடுத்தக்கொள்வாளோ என அஞ்சினான். என்றாலும் துணிவை வரவழைத்துக் கொண்டு, “பஸ் தாமதமாகும்; நீண்டதூரம் செல்ல வேண்டுமோ?” எனக் கரிசனையுடன் கேட்டான். 

அவளும், “ஆமாம்.. தூரம்தான், பரவாயில்லைப் பார்ப்போம்” என்றாள். “தப்பாக எண்ண வேண்டாம் எனது உதவி உங்களுக்கு தேவையா?” என்று கேட்ட அதே கணத்தில், ரவுடிகள் அங்கு வந்து, “என்னடா நம்ம, பொண்ணுடன் என்னவம்பு பண்ணுறாய்” என்றவாறு அவனைத் தாக்கினார்கள். புலியெனப் பாய்ந்த அந்தப் பெண், ரவுடிகளைத் துவம்சம் செய்தாள்.  

அவளிடம் அவன் இப்பொது சண்டைப்பயிற்சி பெறுகிறான். இருவருமே காதலராகி விட்டனர். எவ்வளவு காலத்துக்குத்தான் கதாநாயகன், நாயகியை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவது?

வாழ்வியல் தரிசனம் 12/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X