2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இருசாராரும் வல்லவர்களே!

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயது முதிர்ந்தோர் ஆற்றல் அற்றவர்கள் என்று இளைஞர்களும் அதேவேளை புதிய வரவுகளான இவர்களுக்கு உலகம் பற்றி ஒன்றுமே புரிவதில்லை என்று பரஸ்பரம் இருதரப்பினரும் குறைப்பட்டுக் கொள்ளும் பழக்கம் இன்றும் தொடர்கின்றது.

இப்படிச் சொல்வது எல்லோரினதும் குணம் அல்ல‚ திறமை ஆழுமை எந்தப் பராயத்திலும் பூக்கும். மிகச் சிறிய வயதிலும் சிந்தனைகளைக் கண்டு வருகின்றது இந்தப் புவனம்.

அதேபோல் வயது முதிர்ந்த பின்னரும் சாதனை செய்தபடி வாழ்ந்தவர்களும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நாம் அறிவோம்.

உலகிற்குக்குக் கொடை வழங்கும் இருசாராரும் வல்லவர்களே! எவருமே சாதனையாளராக முடியும். முடிந்தவரை போராடித் தோற்றவர்களும் சாதனையாளர்கள்தான். பலர் இதைப் புரிந்துகொள்வதுமில்லை. படுத்துக்கிடப்பவர்களை எழுந்திருக்கச்செய்து, விழிப்படைய வைப்பதே பெரும்பணி.

வாழ்வியல் தரிசனம் 31/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .