2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘இளைஞர்களே முதியோர் ஆகின்றார்கள்’

Editorial   / 2017 டிசெம்பர் 24 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தாத்தாவிடம் பேரன் கேட்டான், “தாத்தா உங்களுக்கு எத்தனை வயதாகிறது” அவரும் “52” என்றார்.

“அப்படியானால் பாட்டிக்கு எத்தனை  வயதாகிறது” எனக் கேட்டான்.

அவரும் “47” என்றார்.

“அப்பா தனக்கு 38 வயதென்கிறாரே, அப்படியானால் பாட்டி 11 வயதிலயா அப்பாவைப் பெற்றார்?” என்று கேலியுடன் கேட்டான்.

தங்களது வயதைக் குறைத்துச் சொல்வதில் பலரும் விருப்பப்படுகின்றனர். உண்மையில் முதுமை என்பதே ஒரு பெரிய கொடைதான். எல்லோருமே முதுமையுடன் நீண்டகாலம் வாழ ஆசைப்படுவதுண்டு. ஆனால், இளைஞனாகவே இருக்கவே பிரியப்படுவதுதான் விநோதம்.

முதியவர் என்று சொல்லிக்கொள்ளப்பிடிக்காமல் பராயத்தை மறைப்பது கடவுள் தந்த நீண்ட ஆயுளை நிந்திப்பதுமாகும்.

இளமையும் முதுமையும் இயற்கையின் நிகழ்வு. எந்த வயதிலும் மனத்திண்மையுடன் இயங்கலாம். திறன் இருந்தும் அதனைப் பயன்படுத்தாத இளைஞர்களே முதியோர் ஆகின்றார்கள்.  

வாழ்வியல் தரிசனம் 22/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X