2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

‘உங்களிடமே உங்கள் விதி இருக்கின்றது’

Editorial   / 2017 நவம்பர் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவரையும் பெறுமதியற்றவர் என எண்ணற்க! ஒன்றுமே தெரியாத, எதுவுமே செய்யாத நபர்கள் கால ஓட்டத்தில் கோட்டைபோல் வீடுவாசல் அமைத்து அரசர் போல் வாழ்ந்ததும் உண்டு.  

பிறரைக் கிண்டலடித்துக் கேலி பேசியவர்கள், பின்னர் அவர்களிடமே பின்சென்று, உதவி கேட்பதும் காலம் வழங்கும் தண்டனையாகும். 

காரணம் இன்றி எந்த உயிரும் பிறப்பதுமில்லை; எளிய மனிதனை இகழக்கூடாது. 

வலியவர் முன் வளைந்து நெளிந்து பயப்பிடவும் கூடாது. நாங்கள், எமது கடமைகளை ஒழுங்காகச் செய்தால் போதும். வருகின்ற வெகுமதிகளை, எவராலும் தடுக்க முடியாது.  

உங்களிடமே உங்கள் விதி இருக்கின்றது. அதனை வழி நடத்துபவர் நீங்களேயாவார்.  

மக்களைப் போற்றுங்கள்; நீங்கள் உயர்வீர்கள்.  

     வாழ்வியல் தரிசனம் 24/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X