2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உண்மைக்குள் எப்போது நுளைவது?

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய திரைப்பட வளர்ச்சிக்கு நாடகத் துறையே முன்னோடியாக இருந்தது. இன்றும் மேலைத் தேசங்களில் நாடகம் பலவித உத்திகளால் மேலோங்கி நிற்கின்றது. அவர்கள் தங்கள் பாரம்பரிய கலைகளை, அதன் வடிவங்களை குலைத்திடவில்லை. ஒரே நாடகம் இன்றுவரை, தினசரி மேடையேறிய வண்ணம் கூட உள்ளது.  

இந்தியா வறுமையான நாடு, பொருளாதாரச் சிக்கலில் இருக்கின்றது என்று சொல்லப்பட்டாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தோசமாக வாழ, நடிப்புடன் உருவான கலைகளின் வளர்ச்சியே முக்கிய காரணமாகும். கலை, கலாசார பாரம்பரியங்களுடன் ஆன்மிக நாட்டமும் இந்தியாவை உடையாத நாடாக, இறுக்கமான வல்லரசாக மாற்றி நிற்கின்றது. எந்தத் துன்பத்தில் வாழ்பவர்களையும் கலை நிகழ்ச்சிகள் தம்மை மறந்த நிலைக்குள் மாற்றிவிடுகின்றன. 

எனினும் இந்த அதீத பற்றுதல் வெறியாகி, மூடத்தனமான கருதுகோளை உருவாக்கி, நடிப்பே பிரதானம், திரைப்படம், சின்னத்திரைகளே நிஜ உலகம் என்றால் உண்மைக்குள் எப்போது நுளைவது?

வாழ்வியல் தரிசனம் 01/12/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .