Editorial / 2017 ஜூலை 27 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிமையில்லாத உறவு ஸ்திரமற்றது. உறவு என்பது இரத்தம் சம்பந்தமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. முன்பின் தெரியாதவர்களிடம்கூட, பாசபந்தம் ஏற்படலாம்.இது எங்ஙனம் சாத்தியமாகும் என ஆராயவும் கூடாது.
மனம் சம்பந்தப்பட்ட ஈர்ப்புக்கு விளக்கம் கேட்பதைவிட, இத்தகைய உறவை, பேரன்பை நாம் புரிந்து கொண்டால் போதும்.
குழந்தைகள் பேதம் பார்ப்பதுமில்லை; அவை தங்களிடம் எத்தகையவர்கள் பாசத்தைக் காட்டினாலும் புரிந்து கொண்டுவிடுகின்றன.
ஆனால் நம்மவர்களில் பலர், பாசம், அன்பு என்பவற்றைப் பணம், பதவி, செல்வாக்கை மையப்படுத்தியே உறவினர்களைக் கூட, தங்களுடன் சேர்த்துக் கொள்வதா, அல்லது தள்ளி வைப்பதா என்பது பற்றித் தீர்மானிக்கின்றார்கள்.
எத்தகைய ஆழமான பற்றுப் பாசத்தை வைத்திருக்கும் அன்பை உணராமல், அவர்களை உதாசீனப்படுத்துபவர்களிடம் கோபிக்காமல் விலகி நடந்தால், மனம் காயப்படாமல் இருக்கும்.
வாழ்வியல் தரிசனம் 27/07/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .