Princiya Dixci / 2016 நவம்பர் 02 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகுபாடான அன்பைக் காட்டுபவர்களிடம் உண்மைத் தன்மை கிடையாது. ஒரு குடும்பத்தில் பெற்றோர்களில் சிலர் தாங்கள் பெற்ற பிள்ளைகளிடம் கூட பாகுபாடாகவே அன்பை வெளிப்படுத்துவது உண்டு.
மேலும் உறவினர்கள், நண்பர்கள், உடன்பிறப்புக்கள் இடையேயும் பாகுபாடாக நடந்து கொள்வது மனச்சாட்சியற்ற செயல் எனப் புரிந்து கொள்வதுமில்லை.
பணம், புகழ், அந்தஸ்து போன்றவைகளை மையப்படுத்தி உறவுகளுடன் கூட மாறுபாடான கருத்துடன் நடப்பது முறைதானா? எந்த உறவையும் வெறுப்புடன் நோக்குதல் ஆகாது. இத்தகையவர்கள் இறுதியில் தங்களால் நிராகரிக்கப்பட்டவர்களிடம் வந்து உதவிகளைக் கேட்பதுண்டு.
எந்த நிலையும் எவருக்கும் வரலாம்; வராமலும் போகலாம். ஆனால் நாம் எல்லோரும் மானுடர் எனும் உணர்வை மறத்தலாகாது.
வாழ்வியல் தரிசனம் 02/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
35 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
4 hours ago