2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

எல்லோருமே நீதி, நியாயப்படி வாழ முடியும்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களுக்குப் பொருந்தாத முகங்களை அணிய வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாரோ, எவரோ? மாதிரிப் பேசி நடிப்பதும் அவர்களைப் போல நடப்பதும் பொய்யான வேலிக்குள் அடைபட்ட மாதிரி ஆகிவிடும்.  

எங்களின் சிந்தனைகளைத் தூய்மையாக்கி, அவ்வண்ணமே இயங்குவதே சாலச் சிறந்ததாகும். எல்லோருமே நீதி, நியாயப்படி வாழ முடியும். உண்மையுடன் ஒழுகும் எவரின் பண்புகளையும் ஏற்பதும் மூதுரைகளின் படி ஏற்று நடப்பதும் சாலச்சிறந்ததாகும்.  

ஆனால், எமக்கான பாதையில் நல்லபடியே, சுதந்திரமாக இயங்க வேண்டும். ஆண்டவன் எல்லோருக்குமே பிரத்தியேகமான மற்றைய, எவரைப்போலல்லாத உருவத்தைப் படைத்துவிட்டான்.  

இதன் பொருள், நீ நீயாக, உள்ளபடி நற்பண்புடன் வாழ்ந்து கொள்வாய் என்பதாகும். அடுத்தவர் நடை, உடை, எமக்கு எதற்கு? நல்லதை ஏற்க நல்லபடி நடக்க எமக்குச் சகல உரிமையும் உண்டு. பொறுப்பும் உண்டு. எங்கள் பாத்திரப்படைப்பே எமக்கான சிறப்பு!

வாழ்வியல் தரிசனம் 12/12/2016

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X