Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி, செல்வம், அறிவாற்றல் மிகுந்தவர்களைப் பார்த்து, பிறர் பொறாமை கொள்வதுண்டு. ஆனால், இவை எதுவுமற்ற ஏழைப் பாமரனைப் பார்த்துப் பொறாமை கொள்பவர்களை என்ன என்பது?
தினம் ஒருவேளை உண்ணும் ஒருவன், தற்செயலாக ஓரிரு ரூபாய்கள் உழைத்துவிட்டால், போதும் அவனைப் பார்த்து, கிண்டல் செய்யும் வக்கிர நோக்கம் கொண்டவர்கள் கொண்ட பூமி இது.
“ஆளைப் பார் பரதேசியாகத் திரிந்தவனுக்கு இன்று என்ன வந்துவிட்டது” எனச் சொல்லுபவர்கள், ஏழைகள் வாழவழியின்றி அப்படியே இருக்க வேண்டும் எனக் கருதிக்கொள்பவர்களாவர்.
பணக்காரர்களுக்கு மண்டியிட்டு, பணிவிடை செய்பவர்கள் அந்த அடிமை நிலையில் இருந்து, மீள விரும்பாமல், கஸ்டப்பட்டு வாழும், பாமரர்களை இஷ்டத்துடன் திட்டித்தீர்ப்பார்கள்.
கூரான ஆயுதங்களை விட, குத்திக் கொல்லும் நாக்கை உடைய, வக்கிர புத்திக்காரர்கள், வலு இழந்தவர்களைக் கண்டும் இரக்கம் கொள்ளாதவர்கள். ஒருவர் நிலையை ஏற்றிவைத்தால், பூமி உங்களைப் போற்றும்.
வாழ்வியல் தரிசனம் 03/04/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
11 May 2025
11 May 2025