Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியத்தகு விடயங்களைச் செய்துமுடிக்க, ஒரு நொடிப்பொழுது கூடப் போதுமானது. ஓட்டப்போட்டி வெற்றிகளை நிர்ணயிப்பது மிகத் துளிகளில் ஒன்றான வினாடிதான்.
இப்படி இருக்க, ஒரு நாளில் எத்தனை வினாடிகள் கழிந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அவைகளில் எத்தனை நொடிகளை வீணாக்கியுள்ளீர்கள் என்பதையும் மனிதர் எண்ணினால், கட்டாய விழிப்பு நிலை அவர்களை உசாராக்கிவிடும்.
கோடீஸ்வரர் ஒருவர் என்னிடம் கூறினார், “நான் அநியாயமாகக் காலத்தைக் கழித்துவிட்டேன். நான் முதுமை அடைந்த பின்னர்தான், எனக்கு உழைக்கும் ஆசையே வந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு அதிஉன்னத நிலைக்கு இன்று வந்து விட்டேன். இந்த அறிவு நான் இளைஞனாக இருந்தபோது வந்திருந்தால், இந்த நாட்டின் முன்னணி கோடீஸ்வரர் வரிசையில் நான் இருந்திருப்பேன்” என்றார். இளையவர்கள் இதனை உணர்க.
நன்றாக உழைப்பவர்கள் ஒருபோதும் சும்மா இருப்பதில்லை. அடுத்ததாக, அதற்கும் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்றே சதா மனதை உற்சாகப்படுத்திக் கொண்டே, கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
வாழ்வியல் தரிசனம் 04/05/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago