Editorial / 2017 நவம்பர் 29 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணவன், மனைவி உறவு ரொம்பவும் விசித்திரமானதுதான். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, பின்னர் எப்படியோ கணவன் , மனைவியாகிவிடுகின்றனர்.
அப்புறம் நடப்பது என்ன? ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பிக்கின்றனர். இதைக் காதல் என்ற வார்த்தைக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. ஒருவரை ஒருவர் பிரிந்துவிட முடியாமல் தவிக்கின்றனர். ‘இவள் இல்லாமல் நான் இல்லை; இவன் இல்லாமல் நான் இல்லை’ என்றவாறான இருவரின் இருப்புகளும், அவர்களின் அசைவுகளிலும் நினைப்புகளிலும் லயிப்புகளிலும் எப்படித் தெரிகின்றது?
பிள்ளைகளைப் பெற்று, அவர்கள் வளர்ந்த பின்னரும் கூட, எந்தவொரு மனைவியும் கணவனை, வளர்ந்த, முதிர்ச்சியடைந்த ஆன்மாவாக, நபராக கருதுவதேயில்லை.அவனைத் தனது குழந்தையாக , பிள்ளையாகவே கருதும் பாட்டி வயது அம்மாக்களை, நாங்கள் கண்டதுண்டு. “இன்னமும் இவருக்குப் பொறுப்பேயில்லை; சின்னப்பிள்ளைபோல் இருக்கின்றார்” என்பாள். கணவன் சாப்பிடாமல் இருந்தால், இவளுக்கு மனம் பொறுப்பதேயில்லை. தன்னையே அவருக்கு அர்ப்பணிக்கின்றாள். அவனும் அப்படியே! இந்த யுகாந்திரத்துக்கும் மேலான பிணைப்பு எப்படி?
வாழ்வியல் தரிசனம் 29/11/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025