2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கர்மம் : கொடுத்ததை திரும்பப் பெற்றுகொள்

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்கை என்ற பயணம் மிகச்சிறியதாகும். முடிந்தவரை நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வதோடு குறிப்பாக நமக்கு பிடித்த வண்ணம் வாழ பழக வேண்டும். இப்பயணத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை பலரை சந்திக்கின்றோம் அத்துடன் சார்ந்தும் இருக்கின்றோம். ஏன்? பாதி வாழ்க்கை மற்றவர்களுடன் மற்றவர்களுக்காகவே வாழ்வதில் கழிக்கிறோம்.
இந்த குறுகிய பயணத்தில் ஒன்றை முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது, நாம் பங்கிட்டு பகிர்ந்து வாழும் இவ்வாழ்க்கையில் முடிந்தவரை அடுத்தவருக்கு கேடு நினையாது, தாழ்த்தாது இருப்பதை மனதில் வைத்துகொள்வது அவசியமும் அதேசமயம் தேவையுமாகும்.
ஏனெனில், விதையை விதைத்து அது அறுவடைக்காக ஓர் நாள் வளர்ந்து நிற்கும் என்பதை உணருங்கால், கொடுத்ததை திரும்ப பெற்றுகொள்ள வேண்டிய நாள் ஒன்றும் வரும் என்பதை அறிய கடவ.

கொடுங்கள்!  இயலுமானவரை அடுத்தவருக்கு பாதகமற்றவற்றை.....
காத்திருங்கள்!  நீங்கள் கொடுத்ததை திரும்பப் பெற்றுகொள்ள.....

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X