2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘காதல் தேவதைகள்’

Editorial   / 2017 டிசெம்பர் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நண்பர்கள் மூவர் திரைப்படம் பார்க்கச் சென்றனர். இவர்கள் சென்ற வழியெங்கும் தத்தமது காதல் தேவதைகள் பற்றி, நேரடியாகப் புகழ்ந்த வண்ணமிருந்தனர். “அவள் இல்லாதுவிடின், எனது பிராணன் என்னைவிட்டுப் போய்விடும்” என்றான் ஒருவன்.

மற்றவனோ, “எனது உடல், உயிர் எல்லாமே அவள்தான்” என்றான். மூன்றாவது பேர்வழி விடுவானா? “உலகில் இப்படி ஒரு பேரழகியை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்” என்றான்.

திரையரங்குக்குள் மூவரும் நுளைந்தனர். தங்களின் முன்வரிசையில் இருந்த ஒருத்தியை இந்த நண்பர்களில் ஒருவன் பார்த்தான். அவள் யாரோ ஒருவனின் தோழில் சாய்ந்தபடி, தன்னை மறந்த நிலையில் இருந்தாள். இதனைக் கண்டவனுக்கத் தலை சுற்றியது. ‘அடிபாவி என்னை  ஏமாற்றி, யாருடன் நீ இருக்கிறாய்’ என மனம் குமுறினான். இது இப்படி இருக்க, மற்றைய இருவரும் அவளைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். இதே யுவதியைத்தான் தங்கள் காதலி எனப்புகழ்ந்திருந்தார்கள். திரைப்படம் முடிந்தது. மூவரும் ஒன்றும் தெரியாதபடி, தங்கள் காதலி பற்றி மீண்டும் புகழ ஆரம்பித்தார்கள்.

வாழ்வியல் தரிசனம் 21/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X