2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காலத்தால் மறக்கப்பட்டவர்கள்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருள் வசதி குறைந்தவர்கள், தங்களைத் தாங்களே சிறுமைப்படுத்தக்கூடாது.

யாரிடமாவது கையேந்தி வாழ்பவர்கள், சங்கோஜத்துடன் இருக்கலாம். ஆனால், சுயகௌரவத்துடன் உழைத்து வாழ்பவர்கள் வசதிகள் குறைவாக இருப்பினும் தாழ்வு மனப்பாண்மையுடன் இருக்கத் தேவையே இல்லை.

எவருக்கும் உதவிகளை நல்காத உலோபிகள் நிமிர்ந்து நடக்கவே லாயக்கற்றவர்கள். இத்தகையவர்கள் காலத்தால் மறக்கப்பட்டவர்கள்.

கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பாளிகளுக்கு இயல்பாகவே மான உணர்ச்சி அதிகமாகும். இவர்களின் வியர்வைக்கு சொல்லொணா மதிப்பு உண்டு. இதனை நாம் உணர வேண்டும்.

இன்று ஏழைகளும் தங்கள் பிள்ளைகளைக் கல்வியூட்டி, அவர்களை உயர்நிலைக்கு வருவதற்கு தயாராகிச் செல்கின்றனர். முன்னைய காலம் போல் இன்று இல்லை.

அனைவருக்கும் பொதுவான கல்வி ஊட்டப்படுகின்றது. அப்புறம் எதற்காக குறுகிவாழ வேண்டும். கல்வியின் பின்னே அனைத்துச் செல்வங்களும் பின்தொடரும்.

வாழ்வியல் தரிசனம் 10/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .